உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியேறினார்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் திருத்தங்கள் இல்லாமல் நிறைவேற்றப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சட்டமூலத்தின் சான்றிதழை அங்கீகரித்து சட்டமாக கையொப்பமிட்டார்.

அதன்படி இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு 18 ஆம் எண் சட்டமாக நடைமுறைக்கு வரும்