
உதட்டில் முத்தம் கொடுத்த கணவனின் நாக்கை கடித்து துண்டாக்கிய மனைவி
இந்தியாவில் ஆந்திரா பகுதியில் தனது கணவர் அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுக்க வருகிறார் என்று குற்றம் சாட்டிய மனைவி கணவன் முத்தம் கொடுக்க வந்தபோது அவரின் நாக்கை கடித்துத் துப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்னூர் மாவட்டத்தில் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது மனைவியைச் சமாதானப்படுத்த உதட்டில் முத்தம் கொடுக்க கணவர் முயன்றதாகத் தெரிகிறது.
ஆனால் முத்தத்தை மனைவி விரும்பாத நிலையில் கணவர் வலுக்கட்டாயமாகக் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவ்வாறு உதட்டில் முத்தம் கொடுக்க வந்த கணவனின் நாக்கை மனைவி கடித்ததால் படுகாயம் அடைந்த கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வலுக்கட்டாயமாகக் கணவர் முத்தம் கொடுக்க முயன்றதால் நாக்கை கடித்ததாக பொலிஸாரிடம் மனைவி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
