
உணவுப் பொருட்களைப் பெற திரண்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு
காஸாவில் உணவுப் பொருட்களைப் பெறுவதற்காக திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 112 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 760 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அச்சுறுத்தல் ஏற்படுவதாகக் கருதி மக்கள் மீது தமது படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் குறித்த சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
