உணவருந்திக்கொண்டிருந்த நிலையிலேயே உயிரிழந்த நபர்

 

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராமசேவையாளர் அலுவலக வளாகத்திலேயே இவ்வாறு சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த நபர் உணவருந்திக்கொண்டிருந்த வேளை தரையில் அமர்ந்தபடியே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த கணகரத்தினம் ரவிச்சந்திரன் (34 வயது) என்ற மூன்று பிள்ளைகள் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்