உடைந்து வீழ்ந்த மேம்பாலம்
இந்தியாவின் – தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக இதன் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வீசிய கடுங் காற்று காரணமாக இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெலுங்கனா மாநில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்