பிரான்ஸ் கால்பந்து அணியின் அணித்தலைவர் கிலியன் எம்பாப்பே உடல்நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அணியின் பயிற்சியில் பங்கேற்கவில்லை என பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து எம்பாப்பே அணியின் பயிற்சி முகாமிலேயே ஓய்வெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் மாட்ரிட் அணியின் முன்கள வீரரான அவர் பயிற்சியில் பங்கேற்காத நிலையில், ஏனைய வீரர்கள் புதிய பயிற்சியாளர் ஸினடின் ஸிடானின் தலைமையில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
பிரான்ஸ் அணி தனது முதல் UEFA நேஷன்ஸ் லீக் போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை துருக்கியை எதிர்கொள்ளவுள்ளது. இதனைத் தொடர்ந்து பெல்ஜியத்துடன் இரண்டு போ









