உடலுறவை போட்டியாக நடாத்தவுள்ள நாடு: குவிந்துகொண்டிருக்கும் விண்ணப்பங்கள்
உடலுறவு என்றாலே பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விசயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும் நடத்த இருக்கிறது சுவீடன்.
இந்த போட்டியை சுவீடன் செக்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்துள்ளது.
அதற்கு ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப் என பெயரிட்டுள்ள சுவீடன், உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.
இந்தப் போட்டி எதிர்வரும் 8ஆம் திகதி முதல் பல வாரங்கள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் தினமும் 6 மணி நேரம் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.
உடல் மசாஜ், உடலுறவு, துணையை கவர்தல், வாய்வழி பாலியல், சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் குறித்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.
குறித்த போட்டிக்காக 70 சதவீதம் வாக்குகள் பார்வையாளர்கள் அளிப்பார்கள், 30 சதவீதம் வாக்குகள் நடுவர்கள் அளிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
சுவீடனின் அந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் எதிர்ப்பு கருத்துகளையும், சிலர் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.