உக்ரைனின் பாவ்லோஹ்ராட் (Pavlohrad) நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், 67 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ட்ரோன்கள், பீரங்கிகள் மற்றும் வான்வழி குண்டுகள் மூலம் நகரின் பல பகுதிகள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாவ்லோஹ்ராட் உக்ரைன் இராணுவத்திற்கான முக்கிய விநியோக மற்றும் போக்குவரத்து மையமாக இருப்பதால், ரஷ்யாவின் தாக்குதல்கள் அப்பகுதியின் முக்கிய உட்கட்டமைப்புகளையும் குறிவைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.











