உகாண்டாவின் அமைச்சரொருவர் அவரது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொலை
உகாண்டாவின் அமைச்சரான சார்லஸ் எங்கோலா தமது மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உகாண்டா தலைநகர் கம்பாலாவின் புறநகர் பகுதியில் உள்ள எங்கோலாவின் வீட்டிற்குள் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற இராணுவ கேர்ணலான சார்லஸ் எங்கோலா ஜனாதிபதி யோவேரி முசெவேனியின் அரசாங்கத்தில் தொழிலாளர் பிரதி அமைச்சராக பதவி வகித்தார்.
கொலைக்கான நோக்க தெளிவாக தெரியவில்லை. எனினும்இ ‘அமைச்சரிடம் பணிபுரிந்த போதிலும்இ தனக்கு நீண்ட காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று மெய்ப்பாதுகாவலர் சத்தமிட்டுகொண்டிருந்ததாக சாட்சிகள் கூறுகின்றனர்’ என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக உகாண்டா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஃபெலிக்ஸ் குலாயிக்யே தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்