
நான் 2015 இலிருந்து 2020 வரை சிறைச்சாலையில் இருந்தேன் சிறைச்சாலையில் இருந்தவர்களுக்கு தெரியும் அங்கு இருந்து கொண்டு இப்படி ஒரு விடயத்தை செய்ய முடியுமா என்று என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
சனல் 4 என்ற பிரித்தானிய தொலைக்காட்சி இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணியளவில் 2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் அதன் பிண்ணனி என்ன என்பது தொடர்பாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை ச்ந்திரகாந்தன் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன்கிழமை நாடாளுமன் உரையில் இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்தவை காணொளியில்:
