மட்டக்களப்பு ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய தேரோட்டம்

ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலய வருடாந்த தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆலய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது.

கடந்த 14ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா ஆலய பிரதம குருக்கள் தலைமையில் முருக்கப் பொருமானுக்கு விசேட பூஜை வழிபாட்டுடன் தமிழ் மொழியில் வேபரானயங்கள் ஓதப்பட்டு நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது.

மாலை 3 மணிக்கு ஆண்கள் ஒருபகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிளுக்க தேரோட்டம் இடம்பெற்றது

இந்த தேரோட்டத்தின் போது இலங்கையில் முதல் முதலாக வசந்தி கௌதவம் ஆடப்பட்டு வெளிவீதியில் நடனங்கள் ஆடப்பட்டு தோரோட்டம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது

நடன் நிகழ்வுகளை அரங்கேற்றிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட முருகப்பெருமானுக்கு பூஜைவழிபாடு செய்யும் ஒரே ஒரு ஆலயம் மகா துறவி ஓங்காரந்த சரஸ்வதியால் உருவாக்கப்பட்டு ஒரு சித்தர் பீடமாக அருள்பாளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.