ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அமைச்சர் அலி சப்ரி ஈரான் பயணம்

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஈரானின் தப்ரிஸ் நகரில் நடைபெறும் மறைந்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஈரானுக்குப் பயணமாகவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்களின் இறுதி ஊர்வலம் ஈரானின் வடமேற்கு நகரமான தப்ரிஸில் இன்று ஆரம்பமானது.

இந்த நிலையில் தப்ரிஸ் நகரில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஈரானியர்கள், மறைந்த ஜனாதிபதிக்கும் பிற அதிகாரிகளுக்கும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்