
இளைஞர் யுவதிகளுக்கு வதிவிட பயிற்சி் பட்டறை
AHRC நிறுவனத்தின் சமாதானத்திற்கான இளைஞர்கள் எனும் தொனிப்பொருளில் Youth for change எனும் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சி் பட்டறை 45 இளைஞர் யுவதிகளுக்கு மட்டக்களப்பு சர்வோதயா பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது
இப்பயிற்சியின் திட்ட இணைப்பாளர் செல்வி மிரேகா தலைமையில் இடம் பெற்றதுடன், கள உத்தியோகத்தர் அரவிந்தன் மற்றும் திட்ட கணக்காளர் சஞ்சலிதா ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.
இந்நிகழ்வில் AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் லவகுசராசா, பிரதி இணைப்பாளர் அ. மதன் மற்றும் திட்ட ஆலோசகர் மிருனாளன் கலந்து கொண்டதுடன், சிறப்பு அதிதியாக இத்திட்டத்திற்கான நிதி வழங்குனர் UNOPS நிறுவனத்தின் இவாஞ்சலின் டேவிட் பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


