
இளைஞனின் உயிரை குடித்த ஹெரோயின்
யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது – 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இரவு உணவருந்தி விட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நேற்று புதன் கிழமை அதிகாலை 4 மணியளவில் இவர் அசைவற்று காணப்பட்தை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனைகளின்போது, அவர் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
