இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை : கொலைக்கு பயன்படுத்திய கார் மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தவச்செல்வம் பவித்திரன் (23 வயது) என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கொலை குற்றச்சாட்டின் கீழ் ஐந்து சந்தேகநபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பாவனையற்ற வீடு  ஒன்றில் இருந்து, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அவ்விடத்திற்கு விரைந்த தடயவியல் பொலிஸாரும் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

குறித்த குடும்பஸ்தர் மீது,  காரில் வைத்தே தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த காரானது நீண்ட காலம் பாவனை இல்லாமல் இருந்தது போல் தூசிபடிந்தவாறு காணப்படுவதுடன்இ காரின் உள்ளே இரத்தக்கறை காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.