
இளம்பெண்ணை கார் ஏற்றி கொலை செய்த தொழிலதிபர்: சி.சி.ரிவி காட்சிகள்
இந்தியாவில் நண்பர்களுடன் நைட் கிளப்புக்குச் சென்ற பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதம் முற்றியதில் பெண்ணை காரால் ஏற்றி கொண்ட தொழில் அதிபர் கைது.
இந்தியாவில் நண்பர்களுடன் நைட் கிளப்புக்குச் சென்ற பெண்ணிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதம் முற்றியதில் பெண்ணை காரால் ஏற்றி கொண்ட தொழில் அதிபர் கைது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உமா சுதர் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் நிகழ்வு ஒருங்கிணைப்பாளராகபணியாற்றி வரும் நிலையில் தனது நண்பர் ராஜ் குமார் ஜஜாரியா என்பவரோடு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு நைட் கிளப்புக்குச் சென்றுள்ளார்.
அதே கிளப்க்கு மங்கேஷ் அரோரா என்ற தொழிலதிபர் தனது காதலியான ரிக்கி என்பவரோடு வந்த நிலையில் மங்கேஷ் அரோரா உமா சுதரை நோக்கி ஆபாசமாக வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த உமா சுதர் மற்றும் அவரின் நண்பர் ஆகியோர் மங்கேஷ் அரோராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் கிளப் ஊழியர்கள் இரு தரப்பினரையும் வெளியே அனுப்பியுள்ளனர்.
வெளியே வந்தும் வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், மங்கேஷ் அரோரா தனது காதலியுடன் தனது காரில் ஏறி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது அவர்கள் காருக்கு முன்சென்று ராஜ் குமார் மற்றும் உமா சுதர் ஆகியோர் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.
இதன்போது காரை நிறுத்தாமல் மங்கேஷ் அரோரா அவர்கள் மேல் காரை ஏற்றியுள்ளார். இதில் உமா சுதர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜ் குமாரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் மங்கேஷ் அரோராவை கைது செய்தனர்.
⚠️ Horrific visual #Jaipur: Uma Suthar(25) and Raj kumar Jat were run over by a car following a verbal spat with a friend after party at 5.30 am on Tuesday near Malviya Nagar, Jaipur.
The accused driver Mangesh Arora following an argument started hitting the victim with bat,… pic.twitter.com/VvoPgw1TV5
— Saba Khan (@ItsKhan_Saba) December 27, 2023


