
-பதுளை நிருபர்-
பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் இன்று செவ்வாய்கிழமை இல்ல விளையாட்டு போட்டியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை குளவி கொட்டியதில் 76 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பசறை மத்திய மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி பசறை பொது மைதானத்தில் இடம்பெற்று வரும் வேளையில் அருகில் மரமொன்றில் இருந்த குளவி கூடு கலைந்து விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கொட்டியுள்ளது.
இதன்போது 76 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 மாணவர்கள் பசறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் 55 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் பசறை பொது வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஜானக கல்கந்த தெரிவித்தார்.
