
இலங்கை விவசாய திணைக்களத்தினால் நடத்தப்படும் “இலவச விவசாய பண்ணை இயந்திர பயிற்சி”
-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-
இலங்கை விவசாய திணைக்களத்தினால் நடத்தப்படும் “இலவச விவசாய பண்ணை இயந்திர பயிற்சி” அநுராதபுரத்தில் (புளியங்குளம்) எனும் இடத்தில் நடைபெற உள்ளது.
பயிற்சி நெறியின் போது பயிற்சி அளிக்கப்படும் விடயங்கள்..
1) 04 சக்கர உழவு இயந்திர தொழில்சார் சாரதிப் பயிற்சி (10 நாட்கள்)
2) 04 சக்கர உழவு இயந்திர இயக்குதலும்,பராமரித்தலும். (05 நாட்கள்)
03) நுண் நீர்ப்பாசனத் தொகுதி வடிவமைத்தலும்,பொருத்துதலும் (03 நாட்கள்)
04) விவசாய பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகளைக் கையாளுதல். (05 நாட்கள்)
05) 02 சக்கர உழவு இயந்திரத்தை பழுதுபார்த்தல். (05 நாட்கள் )
06) நீர்ப்பம்பிகளை பழுதுபார்த்தல் . (03 நாட்கள்)
07) நீர்ப்பம்பிகளை இயக்குதலும், பராமரித்தலும். (02 நாட்கள்)
08) அறுவடை இயந்திரத்தை இயக்குதலும், பராமரித்தலும். (02 நாட்கள்)
09) நாற்று நடும் இயந்திரத்தை இயக்குதலும், பராமரித்தலும். (01 நாள்) போன்றவைகள் வழங்கப்படும்.
இந்த பயிற்சி நெறியில் கலந்து கொள்பவர்களுக்கு விவசாய திணைக்களத்தினால்:-
1)இலவச தங்குமிடம்
2) இலவச உணவு
3)இலவச பயிற்சி
4)இலவச சான்றிதழ் என்பன வழங்கப்படும்.
இதில் ஆர்வம் உள்ள இளைஞர்கள், விவசாயிகள் சம்மாந்துறை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரி M.T.M.NALEER (AI / OIC)
Department of Agriculture Sammanthurai
0754191403
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
