இலங்கை ரூபாய்

இலங்கை ரூபாய்

இலங்கை ரூபாய்

🟪1825 ஆம் ஆண்டில் இலங்கையின் அதிகாரபூர்வ பணம் ரிக்சுடாலரில் இருந்து பிரித்தானிய பவுண்டுக்கு மாற்றப்பட்டது. அத்துடன் பிரித்தானிய வெள்ளி நாணயம் சட்டப்பூர்வமானது. பவுண்டுகளில் மதிப்பிடப்பட்ட கருவூலத் தாள்கள் 1827 இல் முந்தைய ரிக்ஸ்டாலர் தாள்களுக்குப் பதிலாக வழங்கப்பட்டன. ரிக்சுடாலர் தாள்கள் 1831 சூன் முதல் செல்லாததாக்கப்பட்டன.

🟪1836 செப்டம்பர் 26 அன்று இந்திய ரூபாய் இலங்கையின் நிலையான நாணயமாக மாற்றப்பட்டதுஇ மேலும் இலங்கை இந்திய நாணயப் பகுதிக்கு திரும்பியது. பிரித்தானியப் பவுண்டு மதிப்புள்ள கருவூலத் தாள்கள் 1836 இற்குப் பிறகும்இ ரூபாயுடன் புழக்கத்தில் இருந்தன. சட்ட நாணயம் பிரித்தானிய வெள்ளியாக இருந்ததுஇ கணக்கு வழக்குகள் பவுண்டுஇ வெள்ளி (சில்லிங்கு) மற்றும் பென்சு ஆகியவற்றில் வைக்கப்பட்டன. இருப்பினும்இ பணம் ரூபாயிலும் அணாவிலும் ஒரு ரூபாய்க்கு 2 ஷில்லிங் கணக்கில் செலுத்தப்பட்டது.

🟪இலங்கை வங்கியே முதன் முதலாக இலங்கையில் வங்கித் தாள்களை வழங்கிய முதலாவது தனியார் வங்கி ஆகும் இ கருவூலத் தாள்கள் 1856 இல் திரும்பப் பெறப்பட்டன.

🟪1869 சூன் 18 இல் இந்திய ரூபாய் வரம்பற்ற சட்டமுறைச் செலவாணிப் பணம் ஆக்கப்பட்டது. 1871 ஆகத்து 23 இல் ரூபாய் தசம முறைக்கு மாறியது. இதனால்இ 100 சதம் ஒரு ரூபாய் ஆக இலங்கையின் பணமாக ஆனது. 1872 ஜனவரி 1 முதல் இது நடைமுறைக்கு வந்தது.

உலோக நாணயங்கள்

🎈ஆரம்பகாலங்களில் இலங்கையில் உலோக நாணயங்கள் 1, 2, 5, 10, 25, 50 ஆகிய பெறுமானம் கொண்ட சதங்களாகக் காணப்பட்டன. இலங்கையின் 50வது விடுதலை நாளை நினைவு கூறும் வகையில் 1998-ம் ஆண்டில் 1000 ரூபாய் பெறுமானம் கொண்ட வெள்ளி நாணயங்களும், 5000 ரூபாய் பெறுமானம் கொண்ட தங்க நாணயங்களும் வெளியிடப்பட்டன.

இலங்கை ரூபாய்
இலங்கை ரூபாய்
தாள் நாணயங்கள்

🎈இலங்கையில் ஆரம்பத்தில் புழக்கத்திலுள்ள தாள் நாணயங்கள் 10, 20, 50, 100, 200, 500, 1000, 2000, 5000 ஆகிய பெறுமானங்களில் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.

🎈இலங்கையில் வெளியிடப்படும் அனைத்து தாள் நாணயங்களும்( விசேடமாக பண்படுத்தப்பட்டு இரும்பு நூல் கோர்த்த காதிதத்திலேயே அச்சிடப்பட்டுகின்றன. 200 ரூபாய் நாணயம் மட்டும் விசேட பிளாஸ்டிக் தாளில் அச்சிடப்பட்டுகின்றது. இந்த பிளாஸ்டிக் நாணயம் பல பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இலங்கை தாள் நாணயங்கள் பல வர்ணங்களிலும்இ தலைப்பாகம் அகலவாக்கிலும் அச்சிடப்படுவது தனித்துவமான விடயங்களாகும்

இலங்கை ரூபாய்
இலங்கை ரூபாய்
தற்காலம்

🎈நாணயத்தில் பலவிதமான மாற்றங்கள் வந்துள்ளன. அந்தவகையில் 20 ரூபாய் நாணயக் குற்றி வெளியிடப்பட்டன. மற்றும் இப்போது புழக்கத்திலுள்ள தாள் நாணயங்களாக 20, 50, 100 500, 1000, 5000 காணப்படுகின்றன. குற்றி நாணயங்களாக 5, 10, 20 போன்றவை காணப்படுகின்றன.

இலங்கை ரூபாய்
இலங்கை ரூபாய்

இலங்கை ரூபாய்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்