இலங்கை பெண் பிரித்தானியாவில் கொலை!
பிரித்தானியாவில் வேல்ஸ் கார்டிஃப் நகரில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தோனா நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல (32 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி காலை 7:37 மணிக்கு பொலிஸாரின் அவசர சேவை இலக்கத்திற்கு வந்த அழைப்பினையடுத்து ரிவர்சைடின் தெற்கு மோர்கன் பகுதிக்கு பொலிஸார் சென்றனர்.
அங்கு பெண் ஒருவர் படுகாயங்களுடன் காணப்பட்டுள்ளார், அவரை மீட்ட பொலிஸார், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முற்படுகையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்பே அவர் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பென்ட்வைனைச் சேர்ந்த, திசாரா வெரகலகே (37 வயது) என்ற இலங்கையர், சந்தேகத்தின் பேரில் சிறிது நேரத்திலேயே ஸ்ப்லாட்டில் உள்ள சீவால் சாலையில் வைத்து கைது செய்யப்பட்டார்
அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை பார்வையிடுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
