இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள போரதீவுபற்று பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் வெற்றி

2026 ஆம் ஆண்டிற்கான, வரவு செலவு திட்ட அமர்வு, இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

16 உறுப்பினர்கள் கொண்ட இப்பிரதேச சபையில் தமிழரசுக்கட்சியின் 08 உறுப்பினர்கள் ஆதரவாகவும், தேசிய மக்கள் சக்தியின் 03 உறுப்பினர்கள் நடுநிலையாகவும், கிழக்கு தமிழர் கூட்டமைப்பு 05 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள போரதீவுபற்று பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றியளித்தது.

இச் சந்தர்ப்பத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜூம் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.