இலங்கை உட்பட 3 நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ள எலிசபெத் எம். அலன்

அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் எம். அலன் இம்மாதம் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையான 11 நாட்களும் ஜோர்தான், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடுகளுக்கிடையிலான கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக இந்த விஜயம் அமைகின்றது.

இதேவேளை, அமெரிக்க வெளியுறவுக்கொள்கை மற்றும் பொது இராஜதந்திர முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதுடன் கருத்து சுதந்திரம், பொருளாதாரத்திற்கு அதிகாரமளித்தல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் அலனின் விஜயம் முக்கியத்துவமாக காணப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்