இலங்கையில் 40 ஆயிரத்தை தாண்யுள்ள டெங்கு நோயாளர்கள் : 25 இறப்புகள் இதுவரை பதிவு

இலங்கையில் இந்த வருடம் பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவும் , இதை விட பதிவு செய்யப்படாத பலர் உள்ளதாக அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் பிரிவின் கூற்றுப்படி, ஜூன் 03 ஆம் திகதி வரை மொத்தம் 40,206 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் , இதில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

மேலும், மேல் மாகாணத்தில் 20,000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமாகும்.

இதற்கிடையில், ஜனவரி 2023 முதல் மொத்தம் 25 இறப்புகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும், நுலம்புகள் பெருகும் இடங்களை இனம் கண்டு அழிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்