9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை

-வவுனியா நிருபர்-

9 வயதில் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்து சாதனை படைத்துள்ளார் வவுனியாவை சேர்ந்த மாணவியான டற்ஷனா கோபிநந்தன்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி பயின்று வரும் டற்ஷனா  வவுனியா சிதம்பரேஸ்வரம் நடனாலயத்தின் பரதநாட்டிய ஆசிரியையான கலைமணி திருமதி பிரியங்கா நிக்சன் மற்றும் கலாநிதி நாகராசா செந்தூர்ச்செல்வன் ஆகியோரது மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த அரங்கேற்ற நிகழ்வு கடந்த நேற்று ஞாயிற்றுக்கிழமை  வவுனியாவில் உள்ள சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்