இலங்கையில் இடம்பெறும் வீதி விபத்துகளில் சுமார் 30 சதவீதம் நாய்களுடன் தொடர்புடையவை என உளவியல் முறையில் விலங்குகளைப் பிடிக்கும் கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் நிறுவனர் டொக்டர் சாமித் நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாய்க்கடி சம்பவங்களைத் தொடர்ந்து ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக அரசாங்கம் ஆண்டுதோறும் சுமார் 1 பில்லியன் ரூபாய் செலவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீதிகளில் அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கைக்கு முறையாக நிர்வகிக்கப்படாத குப்பைகள் மற்றும் பொறுப்பற்ற முறையில் நாய்களை கைவிடுவது முக்கிய காரணங்களாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு தீர்வாக முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டத்தின் கீழ், உரிமையாளர்களைக் கொண்ட அனைத்து நாய்களும் உள்ளூராட்சி அமைப்புகளில் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். உரிமையாளர் இல்லாத தெருநாய்களின் தடுப்பூசி மற்றும் கருத்தடை நடவடிக்கைகளுக்கான பொறுப்பை உள்ளூராட்சி அமைப்புகள் ஏற்கும் வகையில் இந்தத் திட்டம் அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









