இலங்கையிலும் ஜோர்ஜியாவிலும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பெண்களிற்கிடையில் தொடர்பு?

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண்ணிற்கும் ஜோர்ஜியாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள பெண்ணிற்கும் தொடர்பிருக்கலாம் என கார்டியன் தெரிவித்துள்ளது.

கார்டியன் மேலும் தெரிவித்துள்ளதாவது

14கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் ஜோர்ஜியா விமானநிலையத்தில் பெல்லா மே கலி கைதுசெய்யப்பட்ட ஒரிரு நாட்களிற்குள் பிரிட்டனிலிருந்து 3000 மைல் தொலைவில் மற்றுமொரு பிரிட்டிஸ் பெண்ணும் இதே குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

சார்லெட் மே லீ கொழும்பு பண்டாரநாயக்க விமானநிலையத்திலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தவேளை தனது இரண்டு சூட்கேஸ்களில் 1.2மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்குஷ்ஷினை கடத்த முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.21 வயதான இவர் முன்னர் விமானப்பணிப்பெண்ணாக பணியாற்றியவர்.

இருவரும்,பாங்கொங்கின் சுவர்ணபூமியி விமானநிலையத்திலிருந்தே பயணித்துள்ளனர்.

ஜோர்ஜியா மற்றும் இலங்கை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஒரு பகுதியாக இரண்டு சம்பவங்களிற்கும் இடையில் தொடர்புகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.

குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் லண்டனை சேர்ந்த லீக்கு 25 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம், டேர்ஹாமை சேர்ந்த கலிக்கு 20 வருட சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.

ஆசியாவில் கஞ்சாவை வாங்குவதை பயன்படுத்துவதை சட்டபூர்வமாக்கிய முதல் நாடு தாய்லாந்து.2022 ஜூன் மாதம் கஞ்சாவை வாங்குவதும் பயன்படுத்துவதும் தாய்லாந்தில் சட்டபூர்வமாக்கப்பட்டது.

தாய்லாந்து அதிகாரிகள் தங்கள் சிறைகளில் காணப்படும் நெருக்கடியை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுசர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு சாதகமான சூழ்நிலைலை உருவாக்கியுள்ளது.இந்த சர்வதேச கடத்தல்காரர்கள் இளம் பயணிகளை தங்கள் வலைக்குள் வீழ்த்தி அவர்களை பயன்படுத்த முயல்கின்றனர், என கார்டியன் தெரிவித்துள்ளது.