இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புதுப்பிக்கப்படுகின்றது – ஜீவன் தொண்டமான் அறிவிப்பு!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை புதுப்பிக்கவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு – ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாட்டில் பழமை வாய்ந்த அமைப்பாகும். தற்போது அதனைப் புதுப்பிக்கும் காலம் வந்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் மாத்திரமல்லாமல், ஏனைய சமூகத்தின் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்