இலங்கைக்கு பயணித்த கப்பல் மோதி அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்தது – VIDEO

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில்  சரக்கு கப்பல் ஒன்று ​மோதியதில்  பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்நிலையில், குறித்த சரக்கு கப்பல் இலங்கை நோக்கிச் சென்ற கப்பல் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

மேரிலண்ட் மாநிலத்தின் பால்டிமோர் நகரிலுள்ள பிரான்சிஸ் ஸ்கொட் கீ பிரிட்ஜ் எனும் பாலமே இவ்வாறு இடிந்தது.

366 மீற்றர் நீளமான பாலத்தின் மீது இன்று அதிகாலை 1.35 மணியளவில் பாரிய சரக்குக் கப்பலொன்று, மோதியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் பாலம் இடிந்ததால் பல வாகனங்களும் ஆற்றில் வீழ்ந்தன.

அவ்வேளையில் குறைந்தபட்சம் 20 நிர்மாண ஊழியர்கள் பாலத்தில் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறைந்தபட்சம் 20 பேர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.