
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த உலர்ந்த இஞ்சி பறிமுதல்
இந்தியாவின் – ராமநாதபுரம், தோப்புவலசை கடற்கரை பகுதியில் இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த ஒரு தொகை இஞ்சி மீட்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தோப்புவலசை கடற்கரையிலிருந்து படகு மூலமாக உலர்ந்த இஞ்சி (சுக்கு) இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இஞ்சி மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது 50 சாக்கு மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் இரண்டு டன் எடை கொண்ட உலர்ந்த இஞ்சி மீட்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த இஞ்சி சட்ட நடவடிக்கைகளுக்காக திருப்புல்லாணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.