இறைவரித் திணைக்களம் இலக்கை விட 105 வீதம் அதிக வருமானம்

முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம், தமது வரி வருமான இலக்கைத் தாண்டியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இலக்கு வருவாயை விட 105 வீதம் அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளதாக ஊராபொல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

“இன்று ஒரு தேசிய நாளிதழில் முதல் காலாண்டில் எதிர்பார்த்த வருவாயில் 19 வீதம்  மட்டுமே ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது”. இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று அவர் இதன் போது தெரிவித்தார்.

மேலும், முதல் காலாண்டில் மதுவரி திணைக்களம் 64 வீதம் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், சுங்கத்துறை எதிர்பார்த்த வருவாயில் 89மூ ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்