இறைச்சி, மீன், முட்டை விலை திடீர் அதிகரிப்பு
சந்தையில் கோழி இறைச்சி, முட்டை மற்றும் மீன் ஆகியவற்றின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அதன்படி கோழி இறைச்சியின் விலை 1500 – 1600 ரூபாவாகவும், பேலியகொடை மீன் சந்தையில் கெலவல்ல 1900 ரூபாவிற்கும், பலயா 1400 ரூபாவிற்கும், பாறை 1700 ரூபாவிற்கும், தலபத் 2700 ரூபாவிற்கும், சால 400 ரூபாவிற்கும், லின்னா 1500 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் முட்டைக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்த போதிலும், முட்டை 53 ரூபா தொடக்கம் 55 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்