
இறைச்சி கடையில் பூனைகள் விற்பனை
சீனாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியுடன் கலந்து விற்பனை செய்வதற்காக லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 1,000 பூனைகளைப் பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியாங்சுவில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றுக்குக் கொண்டு செல்லப் பட்ட பூனைகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையின் போதே இச்சம்வம் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் பூனைகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
