இறப்பர் பட்டி கழுத்தில் இறுகி சிறுவன் மரணம்

வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஒன்பது வயதுடைய சிறுவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதால் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கலவான பொதுப்பிட்டிய, பனாபொல பிரதேசத்தில் உள்ளூர் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்று வந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவன் தனது வீட்டில் இறப்பர் பட்டியில் இரும்பு குண்டு ஒன்றை கட்டி சுழற்றி விளையாடிக்கொண்டிருந்ததாகவும், பந்து சிறுவனின் தலையில் பட்டதாகவும், பின்னர் இறப்பர் பட்டி கழுத்தில் இறுக்கமாக சுற்றியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்