இரு குழுக்களுக்கு இடையே மோதல்: ஆறு பேர் வைத்தியசாலையில்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலையில் இன்று புதன் கிழமை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஆறு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோதலின் போது 28 தொடக்கம் 58 வயதுக்கு இடைப்பட்ட நபர்களே காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

மிரிஸ்வெவ பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சேனைப்பயிர்ச் செய்கைக்குள் மாடுகள் புகுந்து நாசமாக்கியுள்ளதாக சேனைப்பயிர் செய்கையாளர் மாட்டின் உரிமையாளரிடம் நட்டியீடு கோரியபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பெண்ணும் வயோதிபரும் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்