இருபதுக்கு20 உலகக் கிண்ணம்: இலங்கை குழாம் அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளதுடன், உபதலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க, கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, மகீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, நுவான் துஷார, மதீஷ பத்திரன மற்றும் தில்ஷான் மதுஷங்க ஆகியோர் குறித்த குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்