
இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி ஆனை விழுந்தான் மக்கள் கவனிப்பு போராட்டம்
கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட அக்கறையான் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆணை விழுந்தான் பகுதியில் உள்ள சிலமக்கள் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள 55வது இராணுவ முகாமின் முன்னாள் தமது பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக்கூறி கவனயிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அவர்கள் தெரிவிக்கையில், தமது பகுதியில் அனைத்து விடயங்களிலும் இராணுவம் ஒத்தாசை புரிவதாகவும், தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான நிலைமையிலும் தங்களுக்கான குடிநீர் விநியோகத்தினை இராணுவத்தினரே மேற்கொண்டு வருவதாகவும், மேலும் தெரிவிக்கையில், தமது பகுதிகளில் நடைபெறும் எந்த ஒரு நிகழ்வாயினும் இராணுவத்தினரின் உதவியே முதல் கிடைக்கப்பெறுவதாகவும், தமது பகுதிகளில் நடைபெறும் மரண நிகழ்வுகளில் கூட இராணுவத்தின் பங்களிப்பு மிக அதிகமாக உள்ளதாகவும், அத்துடன் தமது பகுதிகளில் சட்ட விரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக இதனை கட்டுப்படுத்துவதில் இராணுவத்தினரே முன்னிப்பதாகவும், இவ்விடயம் தொடர்பாக அக்கறையான் பொலிஸாருக்கு பலமுறை தெரிவித்தாலும் அவர்கள் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை எனவும், எனவே இப்பகுதியில் உள்ள இராணுவ முகாமினை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தி கவனயீர்பு போராட்டத்தை மேற்கொண்டனர்.



