இரவு நேர தபால் ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்

காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் சேவையில் ஈடுபடும் இரவு நேர தபால் ரயில்களின் சாரதிகள், நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு நேர ரயில் போக்குவரத்தின் போது, காட்டு யானைகள் அடிக்கடி மோதுகின்றன. இருப்பினும் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணத் தவறிதாகக் தெரிவித்தே ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்தனர் .

காட்டு யானைகள் அதிகம் உள்ள பகுதிகளில் இயக்கப்படும் சரக்கு ரயில்கள், எரிபொருள்கள் ரயில்களின் சாரதிகளே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.