இரண்டு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்

இரண்டு வயது சிறுமியொருவர்  தாத்தாவினால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர்இ சிறுமிக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, வைத்தியர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, விசாரணைகளின் போது சந்தேக நபர் குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்தது தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்