இரண்டு லொறிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : சிறுவன் உயிரிழப்பு!
கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேபீல்ட் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் கிளிநொச்சியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியில் இருந்த சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.