இரண்டு சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கான்ஸ்டபிள்

இரண்டு சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாணந்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வாதுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளே இவ்வாறு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி கொஸ்கொட பிரதேசத்தில் உள்ள குறித்த நபரின் இல்லத்தை சோதனையிட்ட போது, ​​7 வயது சிறுவனையும் 13 வயது சிறுமியையும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் கொஸ்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்