இயற்கை அழகு குறிப்புகள்

இயற்கை அழகு குறிப்புகள்

இயற்கை அழகு குறிப்புகள்

🔷🔶🔷நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். வைட்டமின்கள்இ தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.

  • பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர, சூரியக் கதிர்களால் எற்படும் கருமை நிறம் மாறும்.
  • பூசணிக்காய் சிறு துண்டுகளாக்கி அதை கண்களைச் சுற்றி வைப்பதால், கண்ணை சுற்றி ஏற்படும் கருமை நிறம் மாறும்
  • பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர, முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
  • புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி மிதமான சுடுநீரில் கழுவ, முகம் பொலிவு பெறும்.
  • ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை  மறைந்து மிருதுவாக மாறும்.
  • வெள்ளரிச்சாறு, சந்தனபொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம்  பிரகாசமாக இருக்கும்.
  • தலை முடி செழித்து வளர வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.
  • கருவளையம் நீங்க ஆரஞ்சு  பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.
  • மருதாணி நன்கு சிவக்க மருதாணி போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்.
  • முகத்தில் கற்றாழைக் கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம்.
  • முல்தானிமட்டியை தயிரில் கலந்து பூச, சருமத் துவாரங்களில் உள்ள அழுக்கு நீங்கி முகம் புத்துணர்வு பெறும்.
  • தயிரைக் கொண்டு முகத்தில் லேசாக மசாஜ் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளின் தீவிரம் குறையும்.
  • தினமும் அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்.
  • தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும், இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.
  • தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாக வளரும்.
  • நெய்யை தடவி வந்தால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

இயற்கை அழகு குறிப்புகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்