இயந்திரக்கோளாறு காரணமாக அதிகாலை பயணத்தை தொடர்ந்த இரவு புகையிரதம்!

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பயணித்த புகையிரதம், இயந்திரக்கோளாறு காரணமாக கிளிநொச்சி கரடிப்போக்கு பகுதியில் இடையில் நின்றமையால், பயணிகள் அசெளகரியங்களை எதிர்நோக்கியதாக தெரிய வருகின்றது.

சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்பு, காங்கேசன்துறை புகையிரத நிலையத்திலிருந்து பிறிதொரு இயந்திரம் வருகை தந்ததைத் தொடர்ந்து, மீண்டும் இயங்க ஆரம்பித்த புகையிரம், பயணத்தை ஆரம்பித்தது.

இரவு 9.45 மணிக்கு இயந்திரக்கோளாறு ஏற்பட்டு நின்ற புகையிரம், அதிகாலை 1.15 மணிக்கு மீண்டும் பயணத்தை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.