இன்றைய ராசி பலன்
மேஷம்
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
ரிஷபம்
உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மனோபலம் அதிகரிக்கும் நாள்.
மிதுனம்
குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். மனநிறைவு ஏற்படும் நாள்.
கடகம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.
சிம்மம்
உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை கற்றுக் கொள்வீர்கள். தடைகள் ஏற்படும் நாள்.
கன்னி
குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களால் பிரச்சனைகள் வரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சோர்வு வந்து நீங்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
துலாம்
கணவன்- மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதுமுடிவுகள் எடுப்பீர்கள். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும் உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதம் வந்து நீங்கும். புதியவர் நண்பர்களாவார்கள். தாய்வழியில் வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தன்னம்பிக்கை பெருகும் நாள்.
தனுசு
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மகரம்
உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.
கும்பம்
நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
மீனம்
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.