இன்றைய ராசி பலன்கள் – ஜூன் 28, 2023 புதன்கிழமை
மேஷம்
வெளிநாட்டுப் பயணங்களுக்கான முயற்சிகளைச் செய்து முடிப்பீர்கள். புதிய நட்புகளால் குடும்பத்தில் பிரச்சினைகளைச் சந்திப்பீர்கள். வீட்டுத் தேவைக்காக அதிகம் செலவு செய்வீர்கள். பிள்ளைகளின் ஆசைக்காக வீட்டை அழகுப்படுத்துவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். கண் திருஷ்டி பாதிப்பால் காலில் கட்டி வந்து அவதிப்படுவீர்கள்.
ரிஷபம்
எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளை களைந்து எறிவீர்கள். வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடக்கும்படி பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தால் பயன் அடைய மாட்டீர்கள். உங்கள் மனக்குறையை மாற்ற குழந்தைப் பாக்கியம் அடைவீர்கள். அரசாங்கத் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்
மகள் வீட்டுக்கு கோபித்துக் கொண்டு போன தாயாரை கூட்டி வருவீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கடுமையாகப் பாடுபடுவீர்கள். பங்குச் சந்தை வியாபாரத்தில் சற்று பாதகத்தை காண்பீர்கள். காதலியின் ஆசையை நிறைவேற்ற மாட்டீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த சங்கடங்களை விலக்குவீர்கள். மரியாதையை நிலை நிறுத்த கடுமையாக பாடுபடுவீர்கள்.
கடகம்
தடைபட்ட வருமானங்களை உயர்த்துவீர்கள். பூமி நிலம் வீடு ஆகியவற்றில் போட்ட முதலீடுகளால் பல மடங்கு லாபத்தை பெறுவீர்கள். அரசு வேலைக்கான கான்ட்ராக்டுகளை எடுப்பீர்கள். ஐடி துறை ஊழியர்கள் அசுரத்தனமாக வேலை செய்வீர்கள். சிறு வியாபாரிகளும் சிறப்பான லாபத்தைப் பெறுவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.
சிம்மம்
தந்தையார் சொத்தில் உங்கள் பங்கை பெற கடுமையாக பாடுபடுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் செல்லும்போது வீட்டில் உள்ள பொருட்களை பத்திரப்படுத்தி விட்டு போக மறக்காதீர்கள். உங்களிடம் வாங்கிச் சாப்பிட்டவர்களே உங்களுக்கு எதிராக நடப்பதால் எரிச்சல் அடைவீர்கள். தேவையில்லாத எதிர்ப்புகளை வலிய சென்று தேடி கொள்ளாதீர்கள்.
கன்னி
கண்ணை மூடிக்கொண்டு எந்தக் காரியத்திலும் இறங்குவீர்கள். பங்குப் பரிவர்த்தனையை படுஜோராக நடத்துவீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் எதிர்பார்த்த ஏற்றத்தை காண்பீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். தொழிலுக்கு எதிராக இருந்தவர்களிடமே உதவி பெறுவீர்கள். வெளிநாட்டிற்கு தொழில் காரணமாக அவசர பயணம் மேற்கொள்வீர்கள்.
துலாம்
எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் லாபமாக நடக்காததால் ஏமாற்றம் அடைவீர்கள். தொழிலில் அதிக முதலீடுகள் செய்யாதீர்கள். அடுத்தவர் வார்த்தையை நம்பி காரியத்தில் இறங்காதீர்கள். அதனால் அவமானம் அடைவீர்கள். ஐடி துறையில் சிக்கலைச் சந்திப்பீர்கள். காதலியின் கோபத்தால் மனக் கொதிப்பு அடைவீர்கள். கடன் வாங்கி கஷ்டத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்
நீங்கள் நல்லது செய்வதாக நினைத்து கெட்ட பெயரை சம்பாதிக்காதீர்கள். வீடு கட்டும் வேலையில் சுணக்கம் காண்பீர்கள். வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவீர்கள். ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள் . குடும்பத்தில் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு போகும்படி நடந்து கொள்ளாதீர்கள்.
தனுசு
வருமானத்திற்கு புதிய வழியை ஏற்படுத்தி பெரிய லாபத்தை காண்பீர்கள். தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய உத்தியைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். மருத்துவர்கள், இன்ஜினியர்கள், எலெக்ட்ரிசியன்கள் உயர்ந்த வருமானத்தை அடைவீர்கள்.
மகரம்
நீண்ட காலமாக தடைபட்டிருந்த திருமணப் பேச்சுவார்த்தைகளை தொடர்வீர்கள். தந்தையாரோடு இருந்த சண்டை சச்சரவுகளை தீர்ப்பீர்கள். பிள்ளைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். சின்னச் சின்ன உடல் உபாதைகளைச் சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்கள் மனதைக் காயப்படுத்தும் வகையில் பேசாதீர்கள்
கும்பம்
குடும்பத்தினருடன் குளிர் பிரதேசங்களுக்குச் செல்வீர்கள். தந்தைவழி சொந்தங்களுக்கு தாராளமாக உதவி செய்வீர்கள். நீண்ட காலமாக ஆசைப்பட்ட பொருளை வாங்குவீர்கள். நகை வாங்கிக் கொடுத்து குடும்பத் தலைவியை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். இடிந்து போன நிலையில் இருந்த வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.
மீனம்
நீங்கள் ஒட்டி ஒட்டிப் போனாலும் உறவுகள் எட்டி எட்டிப் போவதால் ஏமாற்றம் அடைவீர்கள். சமுதாயத்தில் மரியாதை குறைவை சந்திப்பீர்கள். நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்காமல் தடுமாறுவீர்கள். இனம் தெரியாத கவலையால் ரத்த கொதிப்பு அடைவீர்கள். சுவைக்காக சோறு கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள்.சந்திராஷ்டமம், நிதானமாகச் செயல்படுங்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்