இன்றைய ராசிபலன்

மேஷம்

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகர மாக நிறைவேறும். தொடங்கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

ரிஷபம்

சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மிதுனம்

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். சிலருக்கு பிள்ளைகள் மூலமும் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும். பணிச் சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்சனை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.

கடகம்

கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுப நிகழ்ச்சிகளாலும் விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவி கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

கன்னி

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.

துலாம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகும், இளமையும் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.

தனுசு

வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். இனிமையான நாள்.

மகரம்

புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து நீங்கள் பார்க்க வேண்டி வரும். இதனால் வேலை பளு அதிகரித்துக் காணப்படும். மொத்தத்தில், நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்

பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதிக்கும் நாள்.

மீனம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் அதிகாரிகளிடம் செல்வாக்கு கூடும். அமோகமான நாள்.