
இன்றைய ராசிபலன்
மேஷம்
பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
மிதுனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்புக்கூடும் நாள்.
கடகம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். விருந்தினர் வருகை உண்டு. வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.
சிம்மம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சமங்களை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கன்னி
சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.
துலாம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும்.உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
விருச்சிகம்
புதிய பாதையில் பயணிக்க தொடங்குவீர்கள். பழைய உறவினர் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
தனுசு
புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சிறுவார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
மகரம்
வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கவனம் தேவைப்படும் நாள்.
கும்பம்
எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும்.வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
மீனம்
பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.