இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, இது 2022 ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் பதிவாகிய மிகக் குறைந்த அமெரிக்க டொலர் கொள்வனவு வீதமாகும்.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை இன்று ரூ. 287.87 முதல் ரூ. 283.87 ஆகவும் விற்பனை விலை ரூ. 300.92 முதல் ரூ. 297.23 ஆகவும் பதிவாகியுள்ளது.
வளைகுடா நாணயங்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்