இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று ஏற்ற இறக்கமாக காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் 313 ரூபாவாகவும், விற்பனை விகிதம் 328.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் சற்று உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் ஃபிராங்க் ஆகியவற்றிற்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்