இன்று வங்கிகளில் டொலரின் பெறுமதி

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் புதன் கிழமை இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி நிலையாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 315.80 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 330.63 ரூபாவாகவும், கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 315. 70 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 328 ரூபாவாகவும், சம்பத் வங்கியிலும், அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 317 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 328 ரூபாவாக மாறாமலுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.