இன்று முதல் “Ella Weekend Express” என்ற புதிய புகையிரத சேவை ஆரம்பம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, இன்று “Ella Weekend Express” என்ற புதிய தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அழகை ரசித்துக் கொண்டே கொழும்பிலிருந்து பதுளைக்கு தொடருந்தில் பயணிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

அந்த கோரிக்கைகளுக்கு இணங்க , வார இறுதி நாட்களில் “Ella Weekend Express” என்ற புதிய தொடருந்து சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த தொடருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5.30க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்குப் பயணித்து, மறுநாள் பிற்பகல் 1.45க்கு பதுளையில் இருந்து புறப்பட்டு கொழும்பை வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.